ஜனவரி 22, 2014

சோகம்

சிலருக்கு   சோகம்
ஊற்று  நீர்   போல ............
அவ்வப்போது   மனமென்னும்
மணல்   மேட்டில்
ஊறிக்   கொண்டேயிருக்கும் .............
ஊற்று  நீர்   போல்   சோகம்  வேண்டாம் ............
ஊற்று  நீர்   போல்   உற்சாகம்   வேண்டும் .............

சிலருக்கு   சோகம்
ஆற்று   நீர்   போல ............
 மனதில்   ஓரிடத்தில்   நிற்காமல்
வாழ்க்கைப்    போகும்   வழியில்
விதி   போகும்   வழியில்
ஓடிக்   கொண்டேயிருக்கும் .............
ஆற்று   நீர்   போல்
 நிற்காமல்......
சோகத்தைக்   கூட
அடித்துச்   செல்ல   வேண்டும் ..............

 சிலருக்கு   சோகம்
கடல்    நீர்   போல ............
கண்ணீரில்   கரைந்து    கொண்டு
வற்றாத   சோகம்
தீராத   சோகம்   என்று
கடல்   போன்ற    வாழ்க்கையை    பார்த்தே
தினம்   பயந்து   ஓட  வேண்டியுள்ளது .................
சோகக்   கடலுக்குள்
மூழ்கி   விட   வேண்டாம் .............
அதிலும்   மூழ்கி
முத்தெடுக்க   வழி   தேடுங்கள் ...............

இறுதியில்   நம்   உடல்
அஸ்தியாய்
கரைவது   கடலில்   தான்
என்றாலும்
ஆற்று   நீர்   போல்   ஓடி
வாழ்க்கையின்   அழகான
ஒவ்வொரு  நிமிடங்களிலும்
அங்கங்கே   அருவியாய்
துள்ளிக்  குதித்தும் ..........
அங்கங்கே   மேடு  ,  பள்ளம்
தாண்டியும் ............
அங்கங்கே   இளைப்பாறியும் ............
அங்கங்கே   சோகங்களை
தொலைத்து   விட்டும் ...............
வழி   தெரியும்   பாதையில்
பயணம்   செய்தால் ,
இறுதியில்
கடலில்   கலக்கும்   வரை
கலங்கத்   தேவையில்லை ....................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக