ஜூலை 23, 2021

அன்பு


உச்சரிக்கும்  போதே 
உணரப்படும்  வார்த்தை  அது .......
வெறுப்பை  வெல்லக்கூடிய 
ஆயுதம்  அது .......

குற்றம் , குறை  மட்டுமே  கண்டால் 
மெல்ல , மெல்ல 
விரிசல்  விடத்  தொடங்கும் 
அன்பெனும்  பாலத்தில் .........

நினைவுகளை 
அழகாய்  அலங்கரிக்கும் 
அழியாத  அன்பினை 
அள்ளிக்  கொடுத்தால்  என்ன !......

ஜூலை 13, 2021

முதுமையை போற்று



இனிமை  தரும்  இளமையில் 
வெறுமையை  உணரும்  முதியவர்க்காக 
நேரம்  ஒதுக்குங்கள் ........ 

தோளில்  நம்மைத்  தூக்கித் திரிந்தவர்கள் 
தளர்ந்து  போகும்  போது 
தாங்கிக்  கொள்  உனது  தோள்களில் .........

நிற்க  நேரமில்லாமல் 
நமக்காக ஓடி உழைத்தவர்கள் 
போற்றப்  பட  வேண்டும்  முதுமையிலும் .......
அவர்கள்  தந்த 
அன்பு,, அரவணைப்பை 
இரட்டிப்பாக  திருப்பித்  தர வேண்டும் 
அவர்களின்  முதுமை காலத்தில் ........

நம்  தேவைகளை மட்டுமே 
தீர்க்கத்  தெரிந்தவர்களுக்கு 
அவர்கள்  தேவைகளை  கேட்கவே தெரியாது ......
நமக்கு  வெளிச்சம்  கொடுத்த 
அவர்களது  உலகம் 
என்றுமே  இருண்டு  விடக்  கூடாது .......

வேதனைகள்  இல்லாமல் 
நம்மை  வளர்த்தவர்களை 
வேதனைப் படுத்தி  விடாதீர்கள்  முதுமையில் .......
நமக்காக  தூக்கம்  தொலைத்தவர்கள் 
துயரப் படக்  கூடாது  முதுமையில் ........

முதியோரை  மதிக்கத்  தெரியாத  மனிதர்கள் 
மண்ணில்  பிறந்தும்  பயனில்லை ........
போற்றுவோம்  முதுமையை ........
அகற்றுவோம் முதியோர் இல்லங்களை .........
 

ஜூலை 12, 2021

விதிகள்


சிரித்தாலும் , அழுதாலும் 
சிந்தும்  கண்ணீர்  ஒன்று  தான் ........
சுகமோ , சுமையோ 
தாங்கும்  தோள்கள்  ஒன்று  தான் ..........
வெற்றியோ , தோல்வியோ 
வாழ்க்கை  ஒன்று  தான் .........

திருப்பங்கள்  நிறைந்த 
வாழ்க்கைப்  பாதையில் 
எதையும்  எதிர்கொண்டு 
பயணிக்க  கற்றுக் கொள் ..........
ஏற்க  முடியாத 
வலிகள், ஏமாற்றங்கள் கூட 
கடந்து  போகக்  கூடும் .........

இருக்கும்  ஒரு  வாழ்க்கையை 
இறக்கும்  வரை 
ரசித்து  வாழக்  கற்றுக்கொள் .........
ரசிக்க  கூட  மறக்கலாம் 
ஆனால்  
வெறுத்து மட்டும் 
விடாதே .........

வீழ்ந்தாலும் 
வெல்வதற்கு  போராடு ........
விதியைக்  கூட 
மாற்றி  எழுதலாம் ...........


மரங்கள்


மண்ணில்  விழும்  விதைகள்  எல்லாம் 
செடியாய்  தளிர்ப்பதில்லை .........
தளிர்த்த  செடிகள்  எல்லாம் 
ஓங்கி  மரமாய் வளர்வதுமில்லை .........
வளர்ந்த  மரங்கள்  எல்லாம் 
பல்லாண்டுகள்  வாழ்வதும்  இல்லை..........

தினம் போராடி வளர்ந்த மரத்தினை
நொடிப் பொழுதினில்
வேரொடு வெட்டியெறிந்து
வீழச் செய்யும் மனிதர்களே
சற்று சிந்தியுங்கள் .........
வீழ்வது இன்று மரங்கள் என்றாலும்
நாளை வீழப்போவது மனிதர்களே.........

தாகம் தீர்க்க மழையையும்
உயிர் காக்க ஆக்ஸிஜனையும்
இலவசமாய் வழங்கி
உதவிக்கரம் நீட்டும்
மரங்களின் கைகளை இன்று வெட்டினால்
நாளை கையேந்த வேண்டியிருக்கும்
நீருக்காக .........
மூச்சுக் காற்றிற்காக .........

காத்திடுவோம்  காடுகளை .....
விட்டுச் செல்வோம்
பசுமை போர்த்திய பூமியாய் .....
நாளைய தலைமுறையும்
வாழ்வதற்காக............

சிகரெட்

 

கொஞ்சம்  கொஞ்சமாய் 
உன்னைக்  கொல்லும்  என்னை 
ஏன்  கைகளில்  வைத்து  கொண்டாடுகிறாய் .........
விற்பனைக்கு  இங்கு  தடை  இல்லை  என்பதாலோ ?......

உன்  உடம்பை  உருக்கும்  என்னை 
ஏன்  உருகி  உருகி  தேடுகிறாய் .........
உன் வலிகளுக்கு  மருந்தல்ல  நான் 
என்னை  தூக்கி  எறிந்து  விடு .........

கரம்  பிடித்தவளின்  கண்ணீர்  துடைக்க 
என்னை  கை விட்டு  விடு .........
உலகமென  உன்னைச்  சுற்றிச்  சுழலும் 
உறவுகளின்  வார்த்தைகளை  மட்டும் 
உதறிச்  செல்லாதே .........

மாற்றங்கள்  உனக்குள்  தளிர்விட்டால் 
மகிழ்ச்சி  பூக்கும் 
உன் வீட்டுத்  தோட்டத்தில்.........

ஜூலை 10, 2021

அடையாளங்கள்

மணமான பெண்களுக்கு
விரல்கள் அடைபடும் " மெட்டிக்குள் "
கழுத்து அடைபடும் " தாலிக் கயிற்றுக்குள் "
விடுபட விருப்பமில்லாத
ஏற்றுக் கொள்ளப்பட்ட
சமுதாயச் சடங்குகள் ..........
ஏன் இத்தனை அடையாளங்கள் , சடங்குகள்
பெண்களுக்கு மட்டும் ? .......