செப்டம்பர் 22, 2009

கவிதை பூக்கள்


காகிதத்  தோட்டத்தில்
வார்த்தைகள்  முளைத்தால்   தான்
கவிதை  பூக்கள்  பூக்கும் .....

ஆயிரமாயிரம்   கவிதை  பூக்கள்
வாசனை   மட்டும்   இராது ....
ஆனால் அதற்குள்
காதல்   இருக்கும் ......
இனிமை   இருக்கும் .......
சோகம்   இருக்கும் .....
விவேகம்   இருக்கும் ......

அற்புதமான கவிதை பூக்களை
வளர்ப்பதற்காகத்   தான்
எனது   காகிதத்   தோட்டம்
காத்து  கிடக்கின்றது .........

செப்டம்பர் 04, 2009

கனவுகள்


கடந்த   கால   கனவுகளை   எண்ணி
கண்ணீர்   வடிக்காதே.........
நிகழ்கால   கனவுகளை   மட்டும்
நினைத்துக்   கொண்டேயிரு
நிச்சயம்   வெற்றி
உன்   பக்கம்   தான் .........

உன்னைக்    கரை   சேர்க்காத
வெறும்   கற்பனைக்   கனவுகளை
தேடித்   தேடியே
உன்   நிகழ்கால   நிஜங்களை
தொலைத்து   விடாதே ...........

விழித்திரு
வசந்தம்
உன்   வாசல்   வரும்
நிச்சயமாய்..............

ஜூலை 23, 2009

உலகம் முடியும் வரை ஓர் யுத்தம்


மௌனமாய்
ஓர்   யுத்தம்
இரு   இதயங்களுக்கு
இடையில் .........
வெளியே
அமைதி   என்றாலும்
உள்ளுக்குள்ளோ
எங்களது
எதிர்காலக்   கனவுகள்
எரிமலையாய்
வெடித்து  சிதறுகின்றன ...........

எங்கள் இதயக்  கடலிலோ
இடைவிடாமல்
சுனாமி   அலையின்
தாக்குதல் ............
உள்ளுக்குள்ளோ
ஆயிரம்   முனங்கல்   சப்தங்கள்
யாருக்கும்   கேட்காதவாறு
ஒலித்து   கொண்டே   இருக்கின்றது
மிகவும்   மௌனமாய் ..........

இந்த   மௌன  யுத்தத்தில்
தோல்வியென்றால்
இருவரும்   வீழ்வோம்..........
வெற்றியென்றால்
இருவரும்  வாழ்வோம்...........

உலகம்   முடியும்  வரை
இப்படிப்பட்ட   மௌன  யுத்தங்கள்
தொடர்ந்து   கொண்டே   தான்   இருக்கும் .............

வானத்து தேவதை


நிலவுப்   பெண்ணே
வானமென்னும்
உன்   கருவண்ணக்   கூந்தலை
உலர   வைப்பதற்காகவா
எங்கும்   விரித்து   வைத்துள்ளாய் ..........

உன்   கருவண்ணக்
கூந்தலிலோ
தினமும்   மாலையில்
விண்மினிப்   பூக்கள்
அழகாய்   பூத்து   சிரிக்குதடி .....
அதைச்   சூடியவன்   யாரடி ?........

அழகாய்   முகம்   மட்டும்
காட்டுகின்றாய்.........
அவ்வப்போது   வெட்கப்பட்டு
மேகமென்னும்   கைகளால்
உன்   அழகு   ஒளி   முகத்தினையும்
மறைத்துக்   கொள்கின்றாயடி?........

நீயோ
இரவுச்   சூரியன் .........
சுட்டெரிக்காமல்
சுடராய்   மட்டும்
ஒளிர்கின்றாய் .........

உன்னைக்    கவி   பாடத்   தான்
எத்தனை   கவிஞர்கள்
உலகம்   தோன்றிய
நாள்   முதலாய் ..........
நீயோ   அதிர்ஷ்டக்காரியடி..........................

உனக்கு தெரியாமலேயே

உனக்காக
நான்   எழுதிய   கவிதைகள்
கடைசிவரை
நீ   படிக்கப்   படாமலேயே
தொலைந்து   போனது .
தொலைத்தது   நான்   தான் ........

உனக்கென்று
நான்   வீணடித்த
எனது    மணித்துளிகளை
கடைசிவரை
நீ   அறியாமலேயே
பிரிந்து   போய்   விட்டாய்...........

மௌனமாய்
காலம்   மட்டுமா
கடந்து   சென்றது .
கூடவே
மௌனமாய்   நீயும் ..........

உன்   நினைவுகள்   கூட
காயங்களைத்   தர
ஆரம்பித்து   விட்டது ........
நீ   தந்த
வலியிலிருந்து   மீளத்   தான்
வழியைத்   தேடுகின்றேன்
எனக்குள் .........

உன்னை   மறக்க   முடியாமல்
நான்   சிந்திய
கண்ணீர்த்   துளிகளை
கண்கள்   கூட
மறைத்து   விட்டது .............

உனக்கு   தெரியாமலேயே
உன்னை   எனக்குள்
சிறைப் படுத்தினேன்.
அதற்கு   நீ   கொடுத்த
தண்டனை   போதும் .........
தாங்குவதற்கோ
வலிமை   இல்லை .........
உன்னை   நான்
என்   மனச்   சிறையிலிருந்து
விடுதலை   செய்கின்றேன் ............
சுதந்திரமாய்   நானும்
சுற்றித்   திரிய
போகின்றேன்
எல்லைகளைத்    தாண்டி   விடாமல் ........

ஜூலை 21, 2009

கலையாத நினைவுகள்



நட்பிற்கும்
அதன்   பிரிவிற்கும்
இடைவெளி   அதிகமாய்
இருந்தாலும்   கூட
உண்மையான   அன்பென்றால்
இதயத்தில்   என்றுமே
இடைவெளி   இருக்காது ............

காலங்கள்
கடந்து   சென்றாலும்
கடைசி   வரை
என்   இதயக்   கடற்கரையில்
நடை   போட்டுக்   கொண்டிருக்கும்
நம்   காலடித்   தடங்கள்
மிக   மௌனமாய் .............

தொலைவில்   இருந்தாலும்
அடிக்கடி   தொலைபேசியில்
பேசிக்   கொள்வோம்..........
உன்   பேச்சினை
மட்டுமாவது
அவ்வப்போது
போதனையாய்
பெற்றுக்   கொள்கிறேன் ............

உன்னைப்   பார்க்காமல்
எனது   பொழுதுகள்
விடிகின்றது .............
உன்னை
சந்தித்து   பேசாமல்
எனது   நாட்கள்
நடை   போடுகின்றது .............
உன்னோடு
சண்டை   போடாததால்
எனது   நாட்கள்   கூட
வீணாய்   தோன்றுகிறது ............
பயணம்   செல்கிறேன்
நீ   இல்லாமல் ..........
பாதி   நாட்கள்
வழித்துணையாய்
நீ   வந்தாய் .
வசந்தத்தையோ
என்   இதய   வாசலுக்கு
அழைத்து   வந்தாய் ...........
விரைவில்   பிரிய   நேர்ந்தது
இது   தான்   வாழ்க்கை   என்று
என்னை   வாழ்த்தி   அனுப்பினாய் ..............

என்   வாழ்கைப்   பயணம்
முடியும்   வரை
எத்தனையோ   மனிதர்கள்
வழித்துணையாய்............
என்னை   உண்மையாய்
நேசிக்கும்   அன்புள்ளங்களை
என்றுமே   நான்
மறக்க   மாட்டேன் .
மறந்திருந்தால்
அன்று   மடிந்திருப்பேன் ...............


வாழ்க்கை


நம்பிக்கை   தான்   வாழ்க்கை
வரப் போவது   தெரிவதுமில்லை
வாடி   நிற்கத்   தேவையுமில்லை...........

வாழ்ந்து   தான்   பார்ப்போம்
இன்பமோ
வேதனையோ
வருவது   வரட்டும்.
வசந்தம்   என்றால்
வாழ்த்தி   வரவேற்போம்.
வேதனை   என்றால்
மீள   வழிதனை   வகுப்போம் ..........

சுதந்திர   வானில்   பறப்போம்
எல்லைகளைத்   தாண்டி   விடாமல் .
தாண்டிச்   சென்றால்
விழுவது   உறுதி
எழுவது   கடினம் .
எப்பொழுதும்
எச்சரிக்கையுடன்
எதிர்நோக்குங்கள்
வாழ்வினை.................

இயற்கையோடு   பேசுங்கள்
இன்பம் பொங்கும்   பாருங்கள் .
தெளிவான   சிந்தனை
பிறக்கும்   பாருங்கள்..............

அன்பாய்   பழகிப்   பாருங்கள்
ஆறுதல்   கிடைக்கும்   பாருங்கள் ..........
எதையும்  அதிகமாக
எதிர்பார்க்க   வேண்டாம்
அதனால்
ஏமாற்றங்களும்   வேண்டாம் ...........
உண்மையாய்   உழைத்திடுங்கள்
வாழ்வில்   உயர்வென்பதும்   உறுதி ..............

தொடர்கின்ற   பயணம்
இன்று   முடியுமோ?
நாளை   முடியுமோ?
என்று   முடியுமோ?
யாரும்
அறிந்து   கொள்ள   முடியாத
அந்த   முடிவு
இறைவன்   கையில் ..............
நாம்   முழுமையாய்
சரணடைவோம்
இறைவன்   காலடியில் ...........
காத்திடுவான்
நிச்சயம்
நம்   காலம்   முடியும்   வரை .................

எல்லாம் உனக்காக


என்   இதயத்தைக்   கூட
மௌனமாய்
துடிக்கச்   சொன்னேன்
உள்ளே   நீ   உறங்கும்   போது...........

என்   இரத்தத்தைக்   கூட
என்   இதயக்   கரையை
இதமாய்
கடந்து   செல்   என்றேன்
உன்   பெயரை   மட்டும்
அழிக்காதவாறு............

கண்களென்னும்   திரையரங்கில்
தினமும்   திரைப்படமாய்
உன்   நிழற்படம்   மட்டும்   தான்
அரங்கேற   வேண்டும்   என்று
என்   கண்களுக்கு   கூட
கட்டளை   விடுத்தேன்
எல்லாம்   உனக்காக   தானடி .............

புதைகுழி

என்   வாழ்கையை
உன்   விழியென்னும்
புதைகுழிக்குள்
புதைத்து   விட்டாயடி ...............

ஜூலை 07, 2009

கலைந்து போன கனவுகள்

அழகுக்கும்
அமைதிக்கும்
இலக்கணமாய்   அவளிருக்க
கல்வியிலும்
பள்ளியில்   முதலிடமாய்
முத்திரை   பதித்தாள்
பன்னிரெண்டாம்   வகுப்பு
அரசு   பொது   தேர்வினில் ..................

கள்ளம்   கபடம்   இல்லாத
அந்த   இளமனதிற்குள்
ஏதோ   ஒரு   இனம்   புரியாத   ஆசையினை
பெற்றோர்கள் "  கல்யாணம் "  என்ற   பெயரினில்
ஏற்படுத்த   ஆரம்பித்தனர் ..........

பெண்   பார்க்கும்   படலத்தில்
அவளுக்கு   வந்த
முதல்   மாப்பிள்ளையே
முத்தான   மாப்பிள்ளை........

முதன்   முதலாய்
ஓர்   ஆண்   மகனை
எதிர்நோக்கினாள்......
வெட்கத்தினால்
சிவந்து   போயின
அவளது   ரோஜா   முகம் ..........
முதன்   முதலாய்
பேசிய   போது
அவளது   இனிய   குரல்களில்
ஏதோ   ஒரு   நடுக்கம்
ஏதோ   ஒரு   தயக்கம் ...........

கற்பனைக்  கடலில்
எதிர்கால   கனவுகளைத்   தேடி
மூழ்க   ஆரம்பித்தாள்.......
தொலைபேசி   அழைப்பிற்காக
காத்திருப்பாள்
இரவு   பதினொரு   மணி    வரை .............,
பன்னிரெண்டு   மணி   வரை
அவளது   அறையில்
ஒலித்துக்   கொண்டிருக்கும்
அவளது   இனிய   பேச்சும்
அவளது   சின்ன   சின்ன   விவாதமும் ...............
வைக்க   விருப்பம்   இல்லாமல்
வைத்து   விடுவாள்   தொலைபேசியை
ஒரு   மணி   நேரம்   கழிந்தவுடன் .................

இரவில்   புன்னகையால்   பூத்துக்குலுங்கும்
பூக்களைப்   பார்த்திருக்கிறீர்களா?
அது   தான்   அவள் .........
அடுத்த   நாள்   விடியலில்
எதிர்நோக்குவாள்
அன்றைய   இரவின்
தொலைபேசி   அழைப்பிதழை...........
பேசியது   ஒரு   மணி   நேரம்   என்றாலும்
அடுத்த   அழைப்பிதழ்   வரும்   வரை
மனதிற்குள்    ஓயாமல்
ஒலித்துக்   கொண்டிருக்கும்
நேற்றைய   தினத்தில்
இருவரும்   பேசிய   வார்த்தைகள் .................

அவனை   அடிக்கடி   நினைவுபடுத்த
நிச்சயார்த்த   தின   புகைப் படங்களை
புரட்டிப்   பார்ப்பாள் .........
அவளது   தலையணையின்   அடியில்
அவனது   நிழற்படம்
நிஜமென   தூங்கிக்   கொண்டிருக்கும்
அவளது   கனவுப்   போர்வைக்குள் ...................

ஒரு   மாதம்   முடிந்தது.........

ஏதோ  ஓர்   நினைவில்
அவன்   வாகனம்   ஓட்ட
பிரிந்ததல்லவோ   அவனது   உயிர்
அடிபட்ட   இடத்திலேயே..............
வானம்   கூட   கண்ணீரை
மழையென   பொழிந்தது
அவன்   மறைவினை   எண்ணி ..............

மூத்த   மகனைப்    பிரிந்ததனால்
மூச்சுத்      திணறி   நிற்கின்றாள்
அவனது   தாய்........
தந்தையைப்    பிரிந்த   மறு   வருடமே
தமையனையும்   பிரிந்து   விட்டோமே
என   துக்கம்   தாள   முடியாமல்
தாயின்   மடியினில்
தலை   சாய்கின்றான்
அவனது   தம்பி ............

அவள்   வீட்டிற்கோ
தொலைபேசி   அழைப்பு
அதிர்ந்து   நின்றாள்
பெண்ணின்   தாய் .......
வீட்டிற்குள்   தேடிச்   சென்றாள்
தன் கணவனை ..........
பேசாமல்   மௌனமாய்
கண்ணீரில்   கரைந்து   நின்றாள் ......
அதற்குள்   மீண்டும்   ஒரு
தொலைபேசி   அழைப்பு
பெண்ணின்    தந்தையும்
திகைத்து   நிற்க ..............
தன்   அறையிலிருந்து
புன்னகையோடு
வெளி  வந்தாள்
அந்த   பூவை ........

தாய் ,  தந்தை   கோலம்   கண்டு
கலங்கி   நின்றாள்
ஒன்றும்   அறியாதவளாய் .........
சொல்ல   வார்த்தைகள்
இல்லாமல்
அவளது   பெற்றோர்கள்
தயங்கி   நிற்க........
அவளது    தாய்மாமன்
வீட்டிற்குள்
கண்ணீர்   மல்க   ஓடி   வந்து
என்   மருமகளுக்கா
இந்த   நிலைமை
என்று   அழ ஆரம்பித்தவுடன்
புரிந்து   கொண்டாள்
அதன்   உள்   அர்த்தத்தினை ..................
அம்மா   என்று
கதறி   அழ   ஆரம்பித்தாள்................

வெறுமையை   உணர்ந்தவளாய்
என்னையும்
புதைத்து   விடுங்கள்   அவரோடு
என்று   கதறி   அழ.......
தேற்ற   வழியில்லாமல்
மருத்துவர்   வந்து
மயக்க   மருந்து   கொடுக்க
அழைத்துச்   சென்றனர்
அவளது   சித்தி   ஊருக்கு ...............

மாப்பிள்ளை   வீட்டிலோ
மயான   அமைதி   ஊர்வலம்........
மண்ணில்   புதைத்தனர்
அவனது   இளமைக்கால
கற்பனைக்   கனவுகளையும்   சேர்த்து ..............

வாழ்க்கையை   தொலைத்தவளாய்
வாழ   வழி   தெரியாதவளாய்
விழிகளில்   கண்ணீர்   வழிய
அழுது   புலம்பினாள் .................

அவளின்   நிச்சயார்த்த   தின
புகைப்படங்களையும்
அவன்   தந்த
நினைவுப்   பரிசுகளையும்
அவளின்   அனுமதியின்றே
ஆற்றில்   போட்டனர்
அவளது   பெற்றோர்கள் .........
உன்னை   மட்டுமா
தொலைத்தேன்
உன்   நிழற்படங்களையும்
அல்லவா
தொலைத்து   விட்டேன்
என   ஏங்கி
அழ   ஆரம்பித்தாள்..................

துள்ளித்   திரிந்த   தன்   மகளை
தூக்கம்   தொலைத்தவளாய்
மௌனமே   உருவானவளாய்
எதிலும்   விருப்பம்
இல்லாதவளாய்
ஆகாரம்   ஏதும்   உண்ணாதவளாய்
சோர்ந்து   தனித்திருப்பதை
பார்க்க   முடியாமல்
பெற்றோர்கள்
ஒரு   புறம்   புலம்ப
நாட்களும்   ஓடின ...............

பதினாறாம்   நாள்   பூஜை   முடிந்தவுடன்
அவனது   தாய்
உங்கள்   வீட்டுப்பெண்   தான்
என்றும்   எங்கள்   வீட்டு   மருமகள்
தந்து   விடுங்கள்
என்   இரண்டாம்   மகனுக்கு .............
அவன்   அதிகம்   நேசித்த
உங்கள்   மகளை
நாங்களும்
அதிகமாய்   நேசிக்கின்றோம்
என   கூற.............
நிச்சயிக்கப் பட்ட   தேதியில்
அவன்   இறந்த   ஒரு   மாதத்திலேயே
அவன்   தம்பி   மணக்கோலத்தில்..........
அண்ணி    என்று   அழைத்தவனை
அணைத்துக்   கொள்ளப்   போகும்
கொடுமையை   எண்ணி
தலை   குனிந்து   நின்றாள்
மௌனமாய் ..........
உங்களை   கரம்   பிடிக்க
காத்திருந்தேன்
ஆனால்
என்   கனவுகள்   எல்லாம்
கலைந்து   விட்டதே.......
இனி   என்ன   நான்   செய்வது
என்று   செய்வதறியாமல்
கண்ணீரில்   கரைந்து   நின்றாள்
மணக்கோலத்தில் ....................
ஆடம்பரம்   ஏதும்   இல்லாமல்
அமைதியாய்   நடந்து   முடிந்தது
அவர்களது   திருமணம் ..........

அண்ணனின்   கனவு   தேவதைக்கு
நானல்லவோ   மணமாலை   சூடினேன்
என்ற   குற்ற   உணர்ச்சியில்
அவனது  தம்பி  விலகியிருக்க
நாட்களும்   ஓடின ..............

இறந்து   போன   என்   மூத்த   மகன்
என்றும்   நம்மோடு   இணைந்திருப்பான்
அது   உங்கள்   கையில்   தான்   இருக்கிறது.......
உங்கள்   இல்லறம்   இனிமையானால்
நம்   இல்லத்தில்   இனிமை   பொங்க
என்   மூத்த   மகனே
உங்களுக்கு   மகனாய்   பிறப்பான்.......
எனக்கு   என்   மகனை
பேரனாய்   மீட்டுத்   தாருமம்மா
என்று   அவனது   தாயும்  கெஞ்ச
இருவரது   மனமும்
சற்று   மாறத்   தொடங்கியது ................

காதலனை   மகனாய்   பெறுவதற்கு
அவளும்   தவம்   இருக்க   ஆரம்பித்தாள்............
அவனது   ஜனனத்தை   எதிர்நோக்கி
எத்தனையோ   உள்ளங்கள்
இன்னும்   காத்துக்   கொண்டிருக்கின்றது .................

ஜூன் 26, 2009

எதிர்பாராத சந்திப்பு


ஏன்   சந்தித்தோம்?
ஏன்   பேசினோம்?
ஏன்   சந்திக்க   ஆரம்பித்தோம்?
ஏன்   பேச   ஆரம்பித்தோம்?
ஏன்   சிரித்தாய் ?
ஏன்   என்   மனதை   சிதைத்தாய்?
ஏன்   சொல்லாமல்   கூட
விலகிச்  சென்றோம்?
ஏன்   பேசுவதை   நிறுத்தினோம்?
ஏன்   என்று   எனக்குள்   ஆயிரம்   கேள்விகள்
எத்தனை   முறை   எழுந்தன   தெரியுமா ?
இதற்கெல்லாம்   பதில்   "விதி "  தான்   என்றால்
விலகியே   இருப்போம்.........

பார்க்க   முடியாமல்
பேச   முடியாமல்
திடீரென்று   நின்று   போன
நம்   நட்பின்   பயணம்
இருவரும்   சொல்லிக்கொள்ளாமலேயே
இருவரும்   காரணம்   கூறிக்   கொள்ளாமலேயே
தடம்   மாறி   போய்விட்டது ............

வாழ்கைப்   பயணத்தில்
உன்னை   மீண்டும்
சந்திக்கும்
அந்த   நாளை
எதிர்ப்பார்த்து   தான்
காத்திருக்கின்றேன் ........
அப்போதாவது
வாழ்வின்   கடைசி   வரை
பயணம்   செயவோம்........

நிழற்படங்கள்   கூட   இல்லை
உன்னை   அடையாளம்   காட்ட......
ஆனால்
எனக்குள்ளே
நிழற்படமாய்
உன்   நினைவுகள்
பதிந்து   விட்டன .......

உன்னதமான
நம் நட்பு
உன்னதமான
ஓர்   உறவாய்   மாறி
உயிர்   பிரியும்   வரை
உயிர்ப்பித்திருக்க   வேண்டுகின்றேன் ..............

என்னை உயிர்ப்பித்தவள்

உன்னை   வரைந்தேன்
ஓவியன்   என்றனர் ........
உன்னை   வர்ணித்தேன்
கவிஞன்   என்றனர் ........
உன்னை   நினைத்து
உருகி   பாடினேன்
பாடகன்   என்றனர் ........
உன்னைச்   சிலையாய்
செதுக்கினேன்
சிற்பி   என்றனர் ........

என்னை
ஓவியனாய்
கவிஞனாய்
பாடகனாய்
சிற்பியாய்
நீ   மாற்றி   விட்டாய் .......

என் படைப்புகளை
உலகுக்கு    உணர்த்தவோ
பிரம்மன்   உன்னை  படைத்தானோ ?........

ஜூன் 24, 2009

நினைவெல்லாம் நீ

விழிகள்   மூடினாலே
வந்து   விடுகின்றது   உன்   வாசனை .......
கேட்க   ஆரம்பிக்கின்றது   உன்   குரல் .......
வந்து   கண்   முன்னே
நிற்கின்றாய்
நான்   நினைக்காமலே ........
எப்போது   எனக்குள்
இப்படி   கலந்தாய்
என்னை   கேட்காமலே ..........
எப்படி   உன்னை
வெளிநடப்பு   செய்ய   சொல்வேன்
எனக்குள்   இருந்து ..........

அன்பே எனக்காக

என்    கல்லறையில்   கூட
கண்ணீர்   விட்டு   விடாதே .........
தாங்காது   என்   இதயம் ................

உன்னைப்   பிரிந்த   மறு   நிமிடமே
மறு   ஜென்மம்   எடுப்பேன்
மீண்டும்   உனையே   சேர்வதற்கு ..............

ஜூன் 22, 2009

என் பேனா

எழுத   மறுக்கின்றது
உன்   பெயரை
எனக்குள்   வலிக்கும்   என்று .................

நீ தந்த கொலுசு

முத்துக்கள்   கூட   விழுந்து    விட்டன ..........
நடக்கும்   போதாவது
உன்   நினைவோசை
எனக்குள்
ஒலிக்காமல்   இருக்கட்டும்   என்பதற்காக ...........

உன் நினைவுப்பிடியில் சிக்கியதால்


உன்னை   நினைத்தால்
கவிஞனாகி   விடுகின்றேன் .............
உன்னை   நினைத்துக்கொண்டே   இருந்தால்
பைத்தியமாகி   விடுகின்றேன் ............
உன்னை   நினைக்க   மறந்தால்
நிச்சயம்
துறவியாகி   இருப்பேன்..........................

ஜூன் 20, 2009

எழுத்தாய் என் உணர்வுகள்


என்   கவிதை   வரிகளில்
எழுத்தாய்..........
உன்   நினைவுகள்   புதைந்து   கிடக்கின்றன ...........
எழுத்தாய் ...........
நம்   கனவுகள்   கலைந்து   கிடக்கின்றன...........
நீ    நிச்சயம்   படிப்பாயானால்
என்   எழுத்து   கூட   உயிர்   பெறும்...........

காத்திருகின்றேன்
என்   கவிதைகளில்
உன்   கைவிரல்
படும்
நாளை  எண்ணி ..........

உனக்கென்று
ஓர்   கவிதைப்    புத்தகம்
மூடியே   கிடக்கின்றது.
உனக்காக   மட்டுமே
எழுதப்பட்டது
அது ...........
உன்   இதயம்   திறந்து
மனம்   விட்டுப்  படி ...........
ஏனென்றால்
உள்ளே   எழுத்தாய்
உறங்குவது   என்   இதயம்   அல்லவோ .........
நீ   படித்தால்   மட்டுமே
என்   இதயம்   விழித்துக்  கொள்ளும் ............
இல்லையேல்
மௌனமாய்   அது
மடிந்து   கொண்டே   இருக்கும் .................................