ஜனவரி 28, 2014

தவம்

தவம்   கிடக்கின்றேன்
தாய்மைக்காக ...............

எனக்குள்  கருவாய்
எனக்குள்  உயிராய்
எனக்குள்
எட்டி  உதைக்கப்  போகும்
உன்   பிஞ்சுப்  பாதம்
இப்  பூமியில்
கால்படும்   நாளை  எண்ணி
காத்திருக்கின்றேன் ................

என்   மூச்சுக் காற்றை
நீ   சுவாசிக்கப் போகும் 
நாளுக்காக
காத்திருக்கின்றேன் ..............

நொடிகளாய்
நிமிடங்களாய்
மணித்  துளிகளாய்
நாட்களாய்
மாதங்களாய்
வருடங்கள்   மட்டும்
கடந்து   செல்கின்றது ................
தினம்   அதே   பயணம்
தினம்   அதே  தேடல்
எனக்குள் .................

என்   தேடல்   நீ
விடியலாய்
என்   வாசலுக்கு
வந்து   விடு ..............
உன்னைச்   சுற்றி
என்   உலகம்   சுழல
தவம்   கிடக்கின்றேன் ...............

எங்கள்   வேண்டுதல்களை
விண்ணப்பங்களாய்
எல்லா   மத   கடவுள்களுக்கும்
விண்ணப்பித்திருக்கின்றோம் ..............
எங்கள்   விண்ணப்பங்கள்
ஏற்றுக்   கொள்ளப்படும்
நாளுக்காக
காத்திருக்கின்றோம் .......................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக