ஏப்ரல் 08, 2020

வாழ்க்கை ஒரு வரம்

எதிலும்  குறை காணும்  மனிதர்களுக்கு
என்றும்  நிறைவே  இல்லை ..........
குறைகளை  பட்டியலிட்டு
வீணடிக்காதே
மீட்க  முடியாத  மணித்துளிகளை ...........

குழந்தையின்  மனதில்
கோபம் , வெறுப்பு
பொறாமை , பேராசை
வஞ்சகம் , ஏமாற்றுதல்
புறம் பேசுதல்
இவை  ஏதும்  இராது ........
குழந்தை  போல்  இருங்கள்
அன்பு  காட்டுவதில் ..........
அனைவரும்  ஏங்குவது
அன்பிற்கு  மட்டும் தான் ...........

மனிதர்களை  நேசியுங்கள்
மன்னிக்க  கற்று  கொள்ளுங்கள்
மனம்  விட்டு  பாராட்டுங்கள்
வாழ்க்கை  அழகாய்  மாறும்.........
வரமெனும்  வாழ்க்கையில்
சொர்க்கத்தின்  வாசல்கள்
திறக்கப்படும் .நிச்சயமாய் ........

ஏப்ரல் 06, 2020

யுத்தம் 2020



சுதந்திரமாய்  இயங்கிய
உலகத்தின்  எல்லைகள்
மூடப்பட்டு  விட்டன .........

எங்கு  பார்த்தாலும்
எச்சரிக்கை .......
எதிர்பார்க்காத  வாழ்க்கை  இது .........

மனிதனை  மனிதன்  பார்த்து
பயந்து  விலகுகின்றான் .......
தனிமைப்படுத்தப்படும்  நாடுகள்
தனிமைப்படுத்தப்படும் வீடுகள் ........
எதுவரை  நீளுமோ
இந்த  யுத்தம் .........
இரத்தம்  சிந்தவில்லை
கண்ணீர்  சிந்துகின்றோம் ...........

ஆயுதங்கள்  தாக்காத
அறிகுறிகள் தென்படாத
அமைதியான  யுத்தம்  இது .........

கடவுள்  கூட
தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்
ஆலயங்களில் ........
நடமாடும்  கடவுளாய்
பொதுச்சேவை  புரிவோர்கள் ...........

விழிப்புணர்வோடு
விலகி  நின்று
தடுத்து  நிறுத்துவோம்
கொரோனா  யுத்தத்தை ...........


மார்ச் 23, 2020

கொரோனா

                                               
இரண்டாயிரத்து  இருபதை
இருண்ட  உலகத்திற்கு
இழுத்துச்  செல்லும்
இரக்கமற்ற  கொடிய  நோய் .......

சீனாவில்  தொடங்கிய
முதற்கட்டப்  பயணம்
முடிவில்லாமல்
அச்சுறுத்துகிறது  அகிலத்தையே ..........

உலகப்  பொருளாதாரத்தை
உருக்குலைத்து
நினைத்துப்  பார்க்காத  உலகத்தை
உள்ளத்தில்  வலியோடு
உற்றுநோக்கச்  செய்யும்
கொடிய  நோய் .......

அனைத்துப்  பிரச்சனைகளையும்
மறக்கச்  செய்கின்றது .........
 கொரோனா  அச்சுறுத்துதல் ...........

வழிகள்  தெரியாததால்
விழிகள்  தேடுகின்றன
பல  வதந்திகளை ........

ஏற்றத தாழ்வு
பார்க்காமல்  பரவுவதால்  தான்
பதறுகின்றனர்  பணக்காரர்கள் ........

பரவாமல்  தடுக்க
பள்ளி , கல்லூரிகளுக்கு
விடுமுறை  அறிவிப்பு ..........
பயணங்கள்  இல்லாமல்
வீட்டிற்குள்  முடங்கச்  செய்யும்
மகிழ்ச்சி  இல்லாத
விடுமுறை  நாட்கள்
மாணவர்களுக்கு ..........

ஒரு  குடும்பத்தை  மட்டுமே
பாதிக்கும்
அம்மைத்  தொற்றின்  பயம் ......
ஆனால்
ஒட்டுமொத்த  உலகத்தையே
பாதிக்கின்றது
கோவிட  90  வைரஸ்  தொற்றின்  பயம் ........

ஓரிடத்தை  மட்டும்  பாதிக்கும்
இயற்கைப்  பேரிடர்  அல்ல ........
உலகப் பேரிடர்..........
தனிமைப் படுத்தி  விரட்டுவோம் ........
உயிரைப்  பணயம்  வைத்து
நம்  உயிர்  காக்கப்  போராடும்
பொதுச் சேவை  புரிவோரைப்
போற்றுவோம் .........

தன்  மாநிலம்
தன்  நாட்டை  விட்டுச்  சென்றவர்களுக்கு
அனுமதி  மறுப்பு
உள்ளே வர .....
அஞ்சுகின்றோம்  அவர்களைப்  பார்த்து ..........

சுத்தம் , சுகாதாரம்  காக்கும்
பெரிய  நாடுகளுக்கே
ஒரு சவால்  என்றால்
நமக்கோ  பெரும்  போராட்டம்  தான் .......
விழித்துக்  கொள்வோம் ........

பெரிய  வலியல்ல
மாத்ச  சம்பளம்  வாங்குபவர்களுக்கு ..........
ஆனால்
நோய்  வந்து  சாகும்  முன்னே
பசியினால்  உயிர்  போகுமோ
என  அஞ்சும்
தினக்கூலி  பெறும்
பாமர  மக்களுக்கு
விடை தான்  என்னவோ ...........

மூடப்படும்  ஆலயங்கள்
இறைவனை  உனக்குள்
தேடச்  சொல்கின்றது .......
மனித நேயத்தோடு
உதவுவோம்  பிறர்க்கு .........

தொழில்நுட்பம்
இணைத்த  உலகத்தை
கொரோனா
துண்டாக்குகிறது
தனிமைப்படுத்தி ...........

தொழில் நுட்பத்தில்
முன்னோக்கிச்  சென்றாலும் ........
பின்னோக்கிச்  செல்கின்றோம்
நம்  ஆரோக்கியத்தில் .........

உணவெனும்  மருந்து
உற்சாகம்  தந்தது
நம்  முன்னோர்களுக்கு .......
மருந்தெனும்  உணவு
சோர்வைத்  தருகின்றது
நமக்கும்
நம்  சந்ததிகளுக்கும் .........


மீட்டெடுப்போம் 
நம்  முன்னோர்கள்  காட்டிய
உணவு முறைகளை .........
வாழ்வியல்  முறைகளை .........
விரட்டி  அடிப்போம்
உயிர்  பறிக்கும்
தொற்று  நோய்களை ..........