ஜூன் 26, 2009

எதிர்பாராத சந்திப்பு


ஏன்   சந்தித்தோம்?
ஏன்   பேசினோம்?
ஏன்   சந்திக்க   ஆரம்பித்தோம்?
ஏன்   பேச   ஆரம்பித்தோம்?
ஏன்   சிரித்தாய் ?
ஏன்   என்   மனதை   சிதைத்தாய்?
ஏன்   சொல்லாமல்   கூட
விலகிச்  சென்றோம்?
ஏன்   பேசுவதை   நிறுத்தினோம்?
ஏன்   என்று   எனக்குள்   ஆயிரம்   கேள்விகள்
எத்தனை   முறை   எழுந்தன   தெரியுமா ?
இதற்கெல்லாம்   பதில்   "விதி "  தான்   என்றால்
விலகியே   இருப்போம்.........

பார்க்க   முடியாமல்
பேச   முடியாமல்
திடீரென்று   நின்று   போன
நம்   நட்பின்   பயணம்
இருவரும்   சொல்லிக்கொள்ளாமலேயே
இருவரும்   காரணம்   கூறிக்   கொள்ளாமலேயே
தடம்   மாறி   போய்விட்டது ............

வாழ்கைப்   பயணத்தில்
உன்னை   மீண்டும்
சந்திக்கும்
அந்த   நாளை
எதிர்ப்பார்த்து   தான்
காத்திருக்கின்றேன் ........
அப்போதாவது
வாழ்வின்   கடைசி   வரை
பயணம்   செயவோம்........

நிழற்படங்கள்   கூட   இல்லை
உன்னை   அடையாளம்   காட்ட......
ஆனால்
எனக்குள்ளே
நிழற்படமாய்
உன்   நினைவுகள்
பதிந்து   விட்டன .......

உன்னதமான
நம் நட்பு
உன்னதமான
ஓர்   உறவாய்   மாறி
உயிர்   பிரியும்   வரை
உயிர்ப்பித்திருக்க   வேண்டுகின்றேன் ..............

என்னை உயிர்ப்பித்தவள்

உன்னை   வரைந்தேன்
ஓவியன்   என்றனர் ........
உன்னை   வர்ணித்தேன்
கவிஞன்   என்றனர் ........
உன்னை   நினைத்து
உருகி   பாடினேன்
பாடகன்   என்றனர் ........
உன்னைச்   சிலையாய்
செதுக்கினேன்
சிற்பி   என்றனர் ........

என்னை
ஓவியனாய்
கவிஞனாய்
பாடகனாய்
சிற்பியாய்
நீ   மாற்றி   விட்டாய் .......

என் படைப்புகளை
உலகுக்கு    உணர்த்தவோ
பிரம்மன்   உன்னை  படைத்தானோ ?........

ஜூன் 24, 2009

நினைவெல்லாம் நீ

விழிகள்   மூடினாலே
வந்து   விடுகின்றது   உன்   வாசனை .......
கேட்க   ஆரம்பிக்கின்றது   உன்   குரல் .......
வந்து   கண்   முன்னே
நிற்கின்றாய்
நான்   நினைக்காமலே ........
எப்போது   எனக்குள்
இப்படி   கலந்தாய்
என்னை   கேட்காமலே ..........
எப்படி   உன்னை
வெளிநடப்பு   செய்ய   சொல்வேன்
எனக்குள்   இருந்து ..........

அன்பே எனக்காக

என்    கல்லறையில்   கூட
கண்ணீர்   விட்டு   விடாதே .........
தாங்காது   என்   இதயம் ................

உன்னைப்   பிரிந்த   மறு   நிமிடமே
மறு   ஜென்மம்   எடுப்பேன்
மீண்டும்   உனையே   சேர்வதற்கு ..............

ஜூன் 22, 2009

என் பேனா

எழுத   மறுக்கின்றது
உன்   பெயரை
எனக்குள்   வலிக்கும்   என்று .................

நீ தந்த கொலுசு

முத்துக்கள்   கூட   விழுந்து    விட்டன ..........
நடக்கும்   போதாவது
உன்   நினைவோசை
எனக்குள்
ஒலிக்காமல்   இருக்கட்டும்   என்பதற்காக ...........

உன் நினைவுப்பிடியில் சிக்கியதால்


உன்னை   நினைத்தால்
கவிஞனாகி   விடுகின்றேன் .............
உன்னை   நினைத்துக்கொண்டே   இருந்தால்
பைத்தியமாகி   விடுகின்றேன் ............
உன்னை   நினைக்க   மறந்தால்
நிச்சயம்
துறவியாகி   இருப்பேன்..........................

ஜூன் 20, 2009

எழுத்தாய் என் உணர்வுகள்


என்   கவிதை   வரிகளில்
எழுத்தாய்..........
உன்   நினைவுகள்   புதைந்து   கிடக்கின்றன ...........
எழுத்தாய் ...........
நம்   கனவுகள்   கலைந்து   கிடக்கின்றன...........
நீ    நிச்சயம்   படிப்பாயானால்
என்   எழுத்து   கூட   உயிர்   பெறும்...........

காத்திருகின்றேன்
என்   கவிதைகளில்
உன்   கைவிரல்
படும்
நாளை  எண்ணி ..........

உனக்கென்று
ஓர்   கவிதைப்    புத்தகம்
மூடியே   கிடக்கின்றது.
உனக்காக   மட்டுமே
எழுதப்பட்டது
அது ...........
உன்   இதயம்   திறந்து
மனம்   விட்டுப்  படி ...........
ஏனென்றால்
உள்ளே   எழுத்தாய்
உறங்குவது   என்   இதயம்   அல்லவோ .........
நீ   படித்தால்   மட்டுமே
என்   இதயம்   விழித்துக்  கொள்ளும் ............
இல்லையேல்
மௌனமாய்   அது
மடிந்து   கொண்டே   இருக்கும் .................................