ஏப்ரல் 06, 2020

யுத்தம் 2020



சுதந்திரமாய்  இயங்கிய
உலகத்தின்  எல்லைகள்
மூடப்பட்டு  விட்டன .........

எங்கு  பார்த்தாலும்
எச்சரிக்கை .......
எதிர்பார்க்காத  வாழ்க்கை  இது .........

மனிதனை  மனிதன்  பார்த்து
பயந்து  விலகுகின்றான் .......
தனிமைப்படுத்தப்படும்  நாடுகள்
தனிமைப்படுத்தப்படும் வீடுகள் ........
எதுவரை  நீளுமோ
இந்த  யுத்தம் .........
இரத்தம்  சிந்தவில்லை
கண்ணீர்  சிந்துகின்றோம் ...........

ஆயுதங்கள்  தாக்காத
அறிகுறிகள் தென்படாத
அமைதியான  யுத்தம்  இது .........

கடவுள்  கூட
தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்
ஆலயங்களில் ........
நடமாடும்  கடவுளாய்
பொதுச்சேவை  புரிவோர்கள் ...........

விழிப்புணர்வோடு
விலகி  நின்று
தடுத்து  நிறுத்துவோம்
கொரோனா  யுத்தத்தை ...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக