
ஏன் சந்தித்தோம்?
ஏன் பேசினோம்?
ஏன் சந்திக்க ஆரம்பித்தோம்?
ஏன் பேச ஆரம்பித்தோம்?
ஏன் சிரித்தாய் ?
ஏன் என் மனதை சிதைத்தாய்?
ஏன் சொல்லாமல் கூட
விலகிச் சென்றோம்?
ஏன் பேசுவதை நிறுத்தினோம்?
ஏன் என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள்
எத்தனை முறை எழுந்தன தெரியுமா ?
இதற்கெல்லாம் பதில் "விதி " தான் என்றால்
விலகியே இருப்போம்.........
பார்க்க முடியாமல்
பேச முடியாமல்
திடீரென்று நின்று போன
நம் நட்பின் பயணம்
இருவரும் சொல்லிக்கொள்ளாமலேயே
இருவரும் காரணம் கூறிக் கொள்ளாமலேயே
தடம் மாறி போய்விட்டது ............
வாழ்கைப் பயணத்தில்
உன்னை மீண்டும்
சந்திக்கும்
அந்த நாளை
எதிர்ப்பார்த்து தான்
காத்திருக்கின்றேன் ........
அப்போதாவது
வாழ்வின் கடைசி வரை
பயணம் செயவோம்........
நிழற்படங்கள் கூட இல்லை
உன்னை அடையாளம் காட்ட......
ஆனால்
எனக்குள்ளே
நிழற்படமாய்
உன் நினைவுகள்
பதிந்து விட்டன .......
உன்னதமான
நம் நட்பு
உன்னதமான
ஓர் உறவாய் மாறி
உயிர் பிரியும் வரை
உயிர்ப்பித்திருக்க வேண்டுகின்றேன் ..............
ஏன் சந்திக்க ஆரம்பித்தோம்?
ஏன் பேச ஆரம்பித்தோம்?
ஏன் சிரித்தாய் ?
ஏன் என் மனதை சிதைத்தாய்?
ஏன் சொல்லாமல் கூட
விலகிச் சென்றோம்?
ஏன் பேசுவதை நிறுத்தினோம்?
ஏன் என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள்
எத்தனை முறை எழுந்தன தெரியுமா ?
இதற்கெல்லாம் பதில் "விதி " தான் என்றால்
விலகியே இருப்போம்.........
பார்க்க முடியாமல்
பேச முடியாமல்
திடீரென்று நின்று போன
நம் நட்பின் பயணம்
இருவரும் சொல்லிக்கொள்ளாமலேயே
இருவரும் காரணம் கூறிக் கொள்ளாமலேயே
தடம் மாறி போய்விட்டது ............
வாழ்கைப் பயணத்தில்
உன்னை மீண்டும்
சந்திக்கும்
அந்த நாளை
எதிர்ப்பார்த்து தான்
காத்திருக்கின்றேன் ........
அப்போதாவது
வாழ்வின் கடைசி வரை
பயணம் செயவோம்........
நிழற்படங்கள் கூட இல்லை
உன்னை அடையாளம் காட்ட......
ஆனால்
எனக்குள்ளே
நிழற்படமாய்
உன் நினைவுகள்
பதிந்து விட்டன .......
உன்னதமான
நம் நட்பு
உன்னதமான
ஓர் உறவாய் மாறி
உயிர் பிரியும் வரை
உயிர்ப்பித்திருக்க வேண்டுகின்றேன் ..............