
அழகுக்கும்
அமைதிக்கும்
இலக்கணமாய் அவளிருக்க
கல்வியிலும்
பள்ளியில் முதலிடமாய்
முத்திரை பதித்தாள்
பன்னிரெண்டாம் வகுப்பு
அரசு பொது தேர்வினில் ..................
கள்ளம் கபடம் இல்லாத
அந்த இளமனதிற்குள்
ஏதோ ஒரு இனம் புரியாத ஆசையினை
பெற்றோர்கள் " கல்யாணம் " என்ற பெயரினில்
ஏற்படுத்த ஆரம்பித்தனர் ..........
பெண் பார்க்கும் படலத்தில்
அவளுக்கு வந்த
முதல் மாப்பிள்ளையே
முத்தான மாப்பிள்ளை........
முதன் முதலாய்
ஓர் ஆண் மகனை
எதிர்நோக்கினாள்......
வெட்கத்தினால்
சிவந்து போயின
அவளது ரோஜா முகம் ..........
முதன் முதலாய்
பேசிய போது
அவளது இனிய குரல்களில்
ஏதோ ஒரு நடுக்கம்
ஏதோ ஒரு தயக்கம் ...........
கற்பனைக் கடலில்
எதிர்கால கனவுகளைத் தேடி
மூழ்க ஆரம்பித்தாள்.......
தொலைபேசி அழைப்பிற்காக
காத்திருப்பாள்
இரவு பதினொரு மணி வரை .............,
பன்னிரெண்டு மணி வரை
அவளது அறையில்
ஒலித்துக் கொண்டிருக்கும்
அவளது இனிய பேச்சும்
அவளது சின்ன சின்ன விவாதமும் ...............
வைக்க விருப்பம் இல்லாமல்
வைத்து விடுவாள் தொலைபேசியை
ஒரு மணி நேரம் கழிந்தவுடன் .................
இரவில் புன்னகையால் பூத்துக்குலுங்கும்
பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா?
அது தான் அவள் .........
அடுத்த நாள் விடியலில்
எதிர்நோக்குவாள்
அன்றைய இரவின்
தொலைபேசி அழைப்பிதழை...........
பேசியது ஒரு மணி நேரம் என்றாலும்
அடுத்த அழைப்பிதழ் வரும் வரை
மனதிற்குள் ஓயாமல்
ஒலித்துக் கொண்டிருக்கும்
நேற்றைய தினத்தில்
இருவரும் பேசிய வார்த்தைகள் .................
அவனை அடிக்கடி நினைவுபடுத்த
நிச்சயார்த்த தின புகைப் படங்களை
புரட்டிப் பார்ப்பாள் .........
அவளது தலையணையின் அடியில்
அவனது நிழற்படம்
நிஜமென தூங்கிக் கொண்டிருக்கும்
அவளது கனவுப் போர்வைக்குள் ...................
ஒரு மாதம் முடிந்தது.........
ஏதோ ஓர் நினைவில்
அவன் வாகனம் ஓட்ட
பிரிந்ததல்லவோ அவனது உயிர்
அடிபட்ட இடத்திலேயே..............
வானம் கூட கண்ணீரை
மழையென பொழிந்தது
அவன் மறைவினை எண்ணி ..............
மூத்த மகனைப் பிரிந்ததனால்
மூச்சுத் திணறி நிற்கின்றாள்
அவனது தாய்........
தந்தையைப் பிரிந்த மறு வருடமே
தமையனையும் பிரிந்து விட்டோமே
என துக்கம் தாள முடியாமல்
தாயின் மடியினில்
தலை சாய்கின்றான்
அவனது தம்பி ............
அவள் வீட்டிற்கோ
தொலைபேசி அழைப்பு
அதிர்ந்து நின்றாள்
பெண்ணின் தாய் .......
வீட்டிற்குள் தேடிச் சென்றாள்
தன் கணவனை ..........
பேசாமல் மௌனமாய்
கண்ணீரில் கரைந்து நின்றாள் ......
அதற்குள் மீண்டும் ஒரு
தொலைபேசி அழைப்பு
பெண்ணின் தந்தையும்
திகைத்து நிற்க ..............
தன் அறையிலிருந்து
புன்னகையோடு
வெளி வந்தாள்
அந்த பூவை ........
தாய் , தந்தை கோலம் கண்டு
கலங்கி நின்றாள்
ஒன்றும் அறியாதவளாய் .........
சொல்ல வார்த்தைகள்
இல்லாமல்
அவளது பெற்றோர்கள்
தயங்கி நிற்க........
அவளது தாய்மாமன்
வீட்டிற்குள்
கண்ணீர் மல்க ஓடி வந்து
என் மருமகளுக்கா
இந்த நிலைமை
என்று அழ ஆரம்பித்தவுடன்
புரிந்து கொண்டாள்
அதன் உள் அர்த்தத்தினை ..................
அம்மா என்று
கதறி அழ ஆரம்பித்தாள்................
வெறுமையை உணர்ந்தவளாய்
என்னையும்
புதைத்து விடுங்கள் அவரோடு
என்று கதறி அழ.......
தேற்ற வழியில்லாமல்
மருத்துவர் வந்து
மயக்க மருந்து கொடுக்க
அழைத்துச் சென்றனர்
அவளது சித்தி ஊருக்கு ...............
மாப்பிள்ளை வீட்டிலோ
மயான அமைதி ஊர்வலம்........
மண்ணில் புதைத்தனர்
அவனது இளமைக்கால
கற்பனைக் கனவுகளையும் சேர்த்து ..............
வாழ்க்கையை தொலைத்தவளாய்
வாழ வழி தெரியாதவளாய்
விழிகளில் கண்ணீர் வழிய
அழுது புலம்பினாள் .................
அவளின் நிச்சயார்த்த தின
புகைப்படங்களையும்
அவன் தந்த
நினைவுப் பரிசுகளையும்
அவளின் அனுமதியின்றே
ஆற்றில் போட்டனர்
அவளது பெற்றோர்கள் .........
உன்னை மட்டுமா
தொலைத்தேன்
உன் நிழற்படங்களையும்
அல்லவா
தொலைத்து விட்டேன்
என ஏங்கி
அழ ஆரம்பித்தாள்..................
துள்ளித் திரிந்த தன் மகளை
தூக்கம் தொலைத்தவளாய்
மௌனமே உருவானவளாய்
எதிலும் விருப்பம்
இல்லாதவளாய்
ஆகாரம் ஏதும் உண்ணாதவளாய்
சோர்ந்து தனித்திருப்பதை
பார்க்க முடியாமல்
பெற்றோர்கள்
ஒரு புறம் புலம்ப
நாட்களும் ஓடின ...............
பதினாறாம் நாள் பூஜை முடிந்தவுடன்
அவனது தாய்
உங்கள் வீட்டுப்பெண் தான்
என்றும் எங்கள் வீட்டு மருமகள்
தந்து விடுங்கள்
என் இரண்டாம் மகனுக்கு .............
அவன் அதிகம் நேசித்த
உங்கள் மகளை
நாங்களும்
அதிகமாய் நேசிக்கின்றோம்
என கூற.............
நிச்சயிக்கப் பட்ட தேதியில்
அவன் இறந்த ஒரு மாதத்திலேயே
அவன் தம்பி மணக்கோலத்தில்..........
அண்ணி என்று அழைத்தவனை
அணைத்துக் கொள்ளப் போகும்
கொடுமையை எண்ணி
தலை குனிந்து நின்றாள்
மௌனமாய் ..........
உங்களை கரம் பிடிக்க
காத்திருந்தேன்
ஆனால்
என் கனவுகள் எல்லாம்
கலைந்து விட்டதே.......
இனி என்ன நான் செய்வது
என்று செய்வதறியாமல்
கண்ணீரில் கரைந்து நின்றாள்
மணக்கோலத்தில் ....................
ஆடம்பரம் ஏதும் இல்லாமல்
அமைதியாய் நடந்து முடிந்தது
அவர்களது திருமணம் ..........
அண்ணனின் கனவு தேவதைக்கு
நானல்லவோ மணமாலை சூடினேன்
என்ற குற்ற உணர்ச்சியில்
அவனது தம்பி விலகியிருக்க
நாட்களும் ஓடின ..............
இறந்து போன என் மூத்த மகன்
என்றும் நம்மோடு இணைந்திருப்பான்
அது உங்கள் கையில் தான் இருக்கிறது.......
உங்கள் இல்லறம் இனிமையானால்
நம் இல்லத்தில் இனிமை பொங்க
என் மூத்த மகனே
உங்களுக்கு மகனாய் பிறப்பான்.......
எனக்கு என் மகனை
பேரனாய் மீட்டுத் தாருமம்மா
என்று அவனது தாயும் கெஞ்ச
இருவரது மனமும்
சற்று மாறத் தொடங்கியது ................
காதலனை மகனாய் பெறுவதற்கு
அவளும் தவம் இருக்க ஆரம்பித்தாள்............
அவனது ஜனனத்தை எதிர்நோக்கி
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றது .................
இலக்கணமாய் அவளிருக்க
கல்வியிலும்
பள்ளியில் முதலிடமாய்
முத்திரை பதித்தாள்
பன்னிரெண்டாம் வகுப்பு
அரசு பொது தேர்வினில் ..................
கள்ளம் கபடம் இல்லாத
அந்த இளமனதிற்குள்
ஏதோ ஒரு இனம் புரியாத ஆசையினை
பெற்றோர்கள் " கல்யாணம் " என்ற பெயரினில்
ஏற்படுத்த ஆரம்பித்தனர் ..........
பெண் பார்க்கும் படலத்தில்
அவளுக்கு வந்த
முதல் மாப்பிள்ளையே
முத்தான மாப்பிள்ளை........
முதன் முதலாய்
ஓர் ஆண் மகனை
எதிர்நோக்கினாள்......
வெட்கத்தினால்
சிவந்து போயின
அவளது ரோஜா முகம் ..........
முதன் முதலாய்
பேசிய போது
அவளது இனிய குரல்களில்
ஏதோ ஒரு நடுக்கம்
ஏதோ ஒரு தயக்கம் ...........
கற்பனைக் கடலில்
எதிர்கால கனவுகளைத் தேடி
மூழ்க ஆரம்பித்தாள்.......
தொலைபேசி அழைப்பிற்காக
காத்திருப்பாள்
இரவு பதினொரு மணி வரை .............,
பன்னிரெண்டு மணி வரை
அவளது அறையில்
ஒலித்துக் கொண்டிருக்கும்
அவளது இனிய பேச்சும்
அவளது சின்ன சின்ன விவாதமும் ...............
வைக்க விருப்பம் இல்லாமல்
வைத்து விடுவாள் தொலைபேசியை
ஒரு மணி நேரம் கழிந்தவுடன் .................
இரவில் புன்னகையால் பூத்துக்குலுங்கும்
பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா?
அது தான் அவள் .........
அடுத்த நாள் விடியலில்
எதிர்நோக்குவாள்
அன்றைய இரவின்
தொலைபேசி அழைப்பிதழை...........
பேசியது ஒரு மணி நேரம் என்றாலும்
அடுத்த அழைப்பிதழ் வரும் வரை
மனதிற்குள் ஓயாமல்
ஒலித்துக் கொண்டிருக்கும்
நேற்றைய தினத்தில்
இருவரும் பேசிய வார்த்தைகள் .................
அவனை அடிக்கடி நினைவுபடுத்த
நிச்சயார்த்த தின புகைப் படங்களை
புரட்டிப் பார்ப்பாள் .........
அவளது தலையணையின் அடியில்
அவனது நிழற்படம்
நிஜமென தூங்கிக் கொண்டிருக்கும்
அவளது கனவுப் போர்வைக்குள் ...................
ஒரு மாதம் முடிந்தது.........
ஏதோ ஓர் நினைவில்
அவன் வாகனம் ஓட்ட
பிரிந்ததல்லவோ அவனது உயிர்
அடிபட்ட இடத்திலேயே..............
வானம் கூட கண்ணீரை
மழையென பொழிந்தது
அவன் மறைவினை எண்ணி ..............
மூத்த மகனைப் பிரிந்ததனால்
மூச்சுத் திணறி நிற்கின்றாள்
அவனது தாய்........
தந்தையைப் பிரிந்த மறு வருடமே
தமையனையும் பிரிந்து விட்டோமே
என துக்கம் தாள முடியாமல்
தாயின் மடியினில்
தலை சாய்கின்றான்
அவனது தம்பி ............
அவள் வீட்டிற்கோ
தொலைபேசி அழைப்பு
அதிர்ந்து நின்றாள்
பெண்ணின் தாய் .......
வீட்டிற்குள் தேடிச் சென்றாள்
தன் கணவனை ..........
பேசாமல் மௌனமாய்
கண்ணீரில் கரைந்து நின்றாள் ......
அதற்குள் மீண்டும் ஒரு
தொலைபேசி அழைப்பு
பெண்ணின் தந்தையும்
திகைத்து நிற்க ..............
தன் அறையிலிருந்து
புன்னகையோடு
வெளி வந்தாள்
அந்த பூவை ........
தாய் , தந்தை கோலம் கண்டு
கலங்கி நின்றாள்
ஒன்றும் அறியாதவளாய் .........
சொல்ல வார்த்தைகள்
இல்லாமல்
அவளது பெற்றோர்கள்
தயங்கி நிற்க........
அவளது தாய்மாமன்
வீட்டிற்குள்
கண்ணீர் மல்க ஓடி வந்து
என் மருமகளுக்கா
இந்த நிலைமை
என்று அழ ஆரம்பித்தவுடன்
புரிந்து கொண்டாள்
அதன் உள் அர்த்தத்தினை ..................
அம்மா என்று
கதறி அழ ஆரம்பித்தாள்................
வெறுமையை உணர்ந்தவளாய்
என்னையும்
புதைத்து விடுங்கள் அவரோடு
என்று கதறி அழ.......
தேற்ற வழியில்லாமல்
மருத்துவர் வந்து
மயக்க மருந்து கொடுக்க
அழைத்துச் சென்றனர்
அவளது சித்தி ஊருக்கு ...............
மாப்பிள்ளை வீட்டிலோ
மயான அமைதி ஊர்வலம்........
மண்ணில் புதைத்தனர்
அவனது இளமைக்கால
கற்பனைக் கனவுகளையும் சேர்த்து ..............
வாழ்க்கையை தொலைத்தவளாய்
வாழ வழி தெரியாதவளாய்
விழிகளில் கண்ணீர் வழிய
அழுது புலம்பினாள் .................
அவளின் நிச்சயார்த்த தின
புகைப்படங்களையும்
அவன் தந்த
நினைவுப் பரிசுகளையும்
அவளின் அனுமதியின்றே
ஆற்றில் போட்டனர்
அவளது பெற்றோர்கள் .........
உன்னை மட்டுமா
தொலைத்தேன்
உன் நிழற்படங்களையும்
அல்லவா
தொலைத்து விட்டேன்
என ஏங்கி
அழ ஆரம்பித்தாள்..................
துள்ளித் திரிந்த தன் மகளை
தூக்கம் தொலைத்தவளாய்
மௌனமே உருவானவளாய்
எதிலும் விருப்பம்
இல்லாதவளாய்
ஆகாரம் ஏதும் உண்ணாதவளாய்
சோர்ந்து தனித்திருப்பதை
பார்க்க முடியாமல்
பெற்றோர்கள்
ஒரு புறம் புலம்ப
நாட்களும் ஓடின ...............
பதினாறாம் நாள் பூஜை முடிந்தவுடன்
அவனது தாய்
உங்கள் வீட்டுப்பெண் தான்
என்றும் எங்கள் வீட்டு மருமகள்
தந்து விடுங்கள்
என் இரண்டாம் மகனுக்கு .............
அவன் அதிகம் நேசித்த
உங்கள் மகளை
நாங்களும்
அதிகமாய் நேசிக்கின்றோம்
என கூற.............
நிச்சயிக்கப் பட்ட தேதியில்
அவன் இறந்த ஒரு மாதத்திலேயே
அவன் தம்பி மணக்கோலத்தில்..........
அண்ணி என்று அழைத்தவனை
அணைத்துக் கொள்ளப் போகும்
கொடுமையை எண்ணி
தலை குனிந்து நின்றாள்
மௌனமாய் ..........
உங்களை கரம் பிடிக்க
காத்திருந்தேன்
ஆனால்
என் கனவுகள் எல்லாம்
கலைந்து விட்டதே.......
இனி என்ன நான் செய்வது
என்று செய்வதறியாமல்
கண்ணீரில் கரைந்து நின்றாள்
மணக்கோலத்தில் ....................
ஆடம்பரம் ஏதும் இல்லாமல்
அமைதியாய் நடந்து முடிந்தது
அவர்களது திருமணம் ..........
அண்ணனின் கனவு தேவதைக்கு
நானல்லவோ மணமாலை சூடினேன்
என்ற குற்ற உணர்ச்சியில்
அவனது தம்பி விலகியிருக்க
நாட்களும் ஓடின ..............
இறந்து போன என் மூத்த மகன்
என்றும் நம்மோடு இணைந்திருப்பான்
அது உங்கள் கையில் தான் இருக்கிறது.......
உங்கள் இல்லறம் இனிமையானால்
நம் இல்லத்தில் இனிமை பொங்க
என் மூத்த மகனே
உங்களுக்கு மகனாய் பிறப்பான்.......
எனக்கு என் மகனை
பேரனாய் மீட்டுத் தாருமம்மா
என்று அவனது தாயும் கெஞ்ச
இருவரது மனமும்
சற்று மாறத் தொடங்கியது ................
காதலனை மகனாய் பெறுவதற்கு
அவளும் தவம் இருக்க ஆரம்பித்தாள்............
அவனது ஜனனத்தை எதிர்நோக்கி
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றது .................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக