
உனக்காக
நான் எழுதிய கவிதைகள்
கடைசிவரை
நீ படிக்கப் படாமலேயே
தொலைந்து போனது .
தொலைத்தது நான் தான் ........
உனக்கென்று
நான் வீணடித்த
எனது மணித்துளிகளை
கடைசிவரை
நீ அறியாமலேயே
பிரிந்து போய் விட்டாய்...........
மௌனமாய்
காலம் மட்டுமா
கடந்து சென்றது .
கூடவே
மௌனமாய் நீயும் ..........
உன் நினைவுகள் கூட
காயங்களைத் தர
ஆரம்பித்து விட்டது ........
நீ தந்த
வலியிலிருந்து மீளத் தான்
வழியைத் தேடுகின்றேன்
எனக்குள் .........
உன்னை மறக்க முடியாமல்
நான் சிந்திய
கண்ணீர்த் துளிகளை
கண்கள் கூட
மறைத்து விட்டது .............
உனக்கு தெரியாமலேயே
உன்னை எனக்குள்
சிறைப் படுத்தினேன்.
அதற்கு நீ கொடுத்த
தண்டனை போதும் .........
தாங்குவதற்கோ
வலிமை இல்லை .........
உன்னை நான்
என் மனச் சிறையிலிருந்து
விடுதலை செய்கின்றேன் ............
சுதந்திரமாய் நானும்
சுற்றித் திரிய
போகின்றேன்
எல்லைகளைத் தாண்டி விடாமல் ........
கடைசிவரை
நீ படிக்கப் படாமலேயே
தொலைந்து போனது .
தொலைத்தது நான் தான் ........
உனக்கென்று
நான் வீணடித்த
எனது மணித்துளிகளை
கடைசிவரை
நீ அறியாமலேயே
பிரிந்து போய் விட்டாய்...........
மௌனமாய்
காலம் மட்டுமா
கடந்து சென்றது .
கூடவே
மௌனமாய் நீயும் ..........
உன் நினைவுகள் கூட
காயங்களைத் தர
ஆரம்பித்து விட்டது ........
நீ தந்த
வலியிலிருந்து மீளத் தான்
வழியைத் தேடுகின்றேன்
எனக்குள் .........
உன்னை மறக்க முடியாமல்
நான் சிந்திய
கண்ணீர்த் துளிகளை
கண்கள் கூட
மறைத்து விட்டது .............
உனக்கு தெரியாமலேயே
உன்னை எனக்குள்
சிறைப் படுத்தினேன்.
அதற்கு நீ கொடுத்த
தண்டனை போதும் .........
தாங்குவதற்கோ
வலிமை இல்லை .........
உன்னை நான்
என் மனச் சிறையிலிருந்து
விடுதலை செய்கின்றேன் ............
சுதந்திரமாய் நானும்
சுற்றித் திரிய
போகின்றேன்
எல்லைகளைத் தாண்டி விடாமல் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக