ஜூலை 23, 2009

வானத்து தேவதை


நிலவுப்   பெண்ணே
வானமென்னும்
உன்   கருவண்ணக்   கூந்தலை
உலர   வைப்பதற்காகவா
எங்கும்   விரித்து   வைத்துள்ளாய் ..........

உன்   கருவண்ணக்
கூந்தலிலோ
தினமும்   மாலையில்
விண்மினிப்   பூக்கள்
அழகாய்   பூத்து   சிரிக்குதடி .....
அதைச்   சூடியவன்   யாரடி ?........

அழகாய்   முகம்   மட்டும்
காட்டுகின்றாய்.........
அவ்வப்போது   வெட்கப்பட்டு
மேகமென்னும்   கைகளால்
உன்   அழகு   ஒளி   முகத்தினையும்
மறைத்துக்   கொள்கின்றாயடி?........

நீயோ
இரவுச்   சூரியன் .........
சுட்டெரிக்காமல்
சுடராய்   மட்டும்
ஒளிர்கின்றாய் .........

உன்னைக்    கவி   பாடத்   தான்
எத்தனை   கவிஞர்கள்
உலகம்   தோன்றிய
நாள்   முதலாய் ..........
நீயோ   அதிர்ஷ்டக்காரியடி..........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக