
நட்பிற்கும்
அதன் பிரிவிற்கும்
இடைவெளி அதிகமாய்
இருந்தாலும் கூட
உண்மையான அன்பென்றால்
இதயத்தில் என்றுமே
இடைவெளி இருக்காது ............
காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
என் இதயக் கடற்கரையில்
நடை போட்டுக் கொண்டிருக்கும்
நம் காலடித் தடங்கள்
மிக மௌனமாய் .............
தொலைவில் இருந்தாலும்
அடிக்கடி தொலைபேசியில்
பேசிக் கொள்வோம்..........
உன் பேச்சினை
மட்டுமாவது
அவ்வப்போது
போதனையாய்
பெற்றுக் கொள்கிறேன் ............
உன்னைப் பார்க்காமல்
எனது பொழுதுகள்
விடிகின்றது .............
உன்னை
சந்தித்து பேசாமல்
எனது நாட்கள்
நடை போடுகின்றது .............
உன்னோடு
சண்டை போடாததால்
எனது நாட்கள் கூட
வீணாய் தோன்றுகிறது ............
பயணம் செல்கிறேன்
நீ இல்லாமல் ..........
பாதி நாட்கள்
வழித்துணையாய்
நீ வந்தாய் .
வசந்தத்தையோ
என் இதய வாசலுக்கு
அழைத்து வந்தாய் ...........
விரைவில் பிரிய நேர்ந்தது
இது தான் வாழ்க்கை என்று
என்னை வாழ்த்தி அனுப்பினாய் ..............
என் வாழ்கைப் பயணம்
முடியும் வரை
எத்தனையோ மனிதர்கள்
வழித்துணையாய்............
என்னை உண்மையாய்
நேசிக்கும் அன்புள்ளங்களை
என்றுமே நான்
மறக்க மாட்டேன் .
மறந்திருந்தால்
அன்று மடிந்திருப்பேன் ...............
இடைவெளி அதிகமாய்
இருந்தாலும் கூட
உண்மையான அன்பென்றால்
இதயத்தில் என்றுமே
இடைவெளி இருக்காது ............
காலங்கள்
கடந்து சென்றாலும்
கடைசி வரை
என் இதயக் கடற்கரையில்
நடை போட்டுக் கொண்டிருக்கும்
நம் காலடித் தடங்கள்
மிக மௌனமாய் .............
தொலைவில் இருந்தாலும்
அடிக்கடி தொலைபேசியில்
பேசிக் கொள்வோம்..........
உன் பேச்சினை
மட்டுமாவது
அவ்வப்போது
போதனையாய்
பெற்றுக் கொள்கிறேன் ............
உன்னைப் பார்க்காமல்
எனது பொழுதுகள்
விடிகின்றது .............
உன்னை
சந்தித்து பேசாமல்
எனது நாட்கள்
நடை போடுகின்றது .............
உன்னோடு
சண்டை போடாததால்
எனது நாட்கள் கூட
வீணாய் தோன்றுகிறது ............
பயணம் செல்கிறேன்
நீ இல்லாமல் ..........
பாதி நாட்கள்
வழித்துணையாய்
நீ வந்தாய் .
வசந்தத்தையோ
என் இதய வாசலுக்கு
அழைத்து வந்தாய் ...........
விரைவில் பிரிய நேர்ந்தது
இது தான் வாழ்க்கை என்று
என்னை வாழ்த்தி அனுப்பினாய் ..............
என் வாழ்கைப் பயணம்
முடியும் வரை
எத்தனையோ மனிதர்கள்
வழித்துணையாய்............
என்னை உண்மையாய்
நேசிக்கும் அன்புள்ளங்களை
என்றுமே நான்
மறக்க மாட்டேன் .
மறந்திருந்தால்
அன்று மடிந்திருப்பேன் ...............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக