
நம்பிக்கை தான் வாழ்க்கை
வரப் போவது தெரிவதுமில்லை
வாடி நிற்கத் தேவையுமில்லை...........
வாழ்ந்து தான் பார்ப்போம்
இன்பமோ
வேதனையோ
வருவது வரட்டும்.
வசந்தம் என்றால்
வாழ்த்தி வரவேற்போம்.
வேதனை என்றால்
மீள வழிதனை வகுப்போம் ..........
சுதந்திர வானில் பறப்போம்
எல்லைகளைத் தாண்டி விடாமல் .
தாண்டிச் சென்றால்
விழுவது உறுதி
எழுவது கடினம் .
எப்பொழுதும்
எச்சரிக்கையுடன்
எதிர்நோக்குங்கள்
வாழ்வினை.................
இயற்கையோடு பேசுங்கள்
இன்பம் பொங்கும் பாருங்கள் .
தெளிவான சிந்தனை
பிறக்கும் பாருங்கள்..............
அன்பாய் பழகிப் பாருங்கள்
ஆறுதல் கிடைக்கும் பாருங்கள் ..........
எதையும் அதிகமாக
எதிர்பார்க்க வேண்டாம்
அதனால்
ஏமாற்றங்களும் வேண்டாம் ...........
உண்மையாய் உழைத்திடுங்கள்
வாழ்வில் உயர்வென்பதும் உறுதி ..............
தொடர்கின்ற பயணம்
இன்று முடியுமோ?
நாளை முடியுமோ?
என்று முடியுமோ?
யாரும்
அறிந்து கொள்ள முடியாத
அந்த முடிவு
இறைவன் கையில் ..............
நாம் முழுமையாய்
சரணடைவோம்
இறைவன் காலடியில் ...........
காத்திடுவான்
நிச்சயம்
நம் காலம் முடியும் வரை .................
வாடி நிற்கத் தேவையுமில்லை...........
வாழ்ந்து தான் பார்ப்போம்
இன்பமோ
வேதனையோ
வருவது வரட்டும்.
வசந்தம் என்றால்
வாழ்த்தி வரவேற்போம்.
வேதனை என்றால்
மீள வழிதனை வகுப்போம் ..........
சுதந்திர வானில் பறப்போம்
எல்லைகளைத் தாண்டி விடாமல் .
தாண்டிச் சென்றால்
விழுவது உறுதி
எழுவது கடினம் .
எப்பொழுதும்
எச்சரிக்கையுடன்
எதிர்நோக்குங்கள்
வாழ்வினை.................
இயற்கையோடு பேசுங்கள்
இன்பம் பொங்கும் பாருங்கள் .
தெளிவான சிந்தனை
பிறக்கும் பாருங்கள்..............
அன்பாய் பழகிப் பாருங்கள்
ஆறுதல் கிடைக்கும் பாருங்கள் ..........
எதையும் அதிகமாக
எதிர்பார்க்க வேண்டாம்
அதனால்
ஏமாற்றங்களும் வேண்டாம் ...........
உண்மையாய் உழைத்திடுங்கள்
வாழ்வில் உயர்வென்பதும் உறுதி ..............
தொடர்கின்ற பயணம்
இன்று முடியுமோ?
நாளை முடியுமோ?
என்று முடியுமோ?
யாரும்
அறிந்து கொள்ள முடியாத
அந்த முடிவு
இறைவன் கையில் ..............
நாம் முழுமையாய்
சரணடைவோம்
இறைவன் காலடியில் ...........
காத்திடுவான்
நிச்சயம்
நம் காலம் முடியும் வரை .................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக