உதடுகள்
பேச தயங்கும்
வார்த்தைகளை
பேசுகின்றது
நம் விழிகள் .......
என்னை இழுக்கின்றது
உன் விழியென்னும் புதைகுழி .......
அதனால் தான்
மௌனமாய்
தலை குனிந்து செல்கின்றேன்
உன்னை கடக்கும் போது மட்டும் ..........
விரல் பட்டால் வாடி விடுவேன்
எட்டி நின்றே எனை ரசித்திடு
ரோஜா ......
ஓடும் வரை மதிப்புண்டு
ஓய்ந்து நின்றால் மதிப்பில்லை
கடிகாரத்திற்கும் , மனிதனுக்கும் .......
அழிக்கின்றாய் காடுகளை
தகர்க்கின்றாய் மலைகளை
உறிஞ்சுகின்றாய் நதிகளை
எரித்திடுவேன் என்பதால்
எனை மட்டும் தொட அஞ்சுகின்றாய்
சூரியன் ........